சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஐந்தாயிரத்து 659 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 97 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 85 ஆயிரத்து 58 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த ஐந்தாயிரத்து 646 நபர்களுக்கும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு வந்த ஐந்து நபர்களுக்கும், மேற்கு வங்கம், பிகாரிலிருந்து வந்த தலா இரண்டு நபர்களுக்கும், ராஜஸ்தான், கேரளா, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் ஐந்தாயிரத்து 659 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 71 லட்சத்து 35 ஆயிரத்து 878 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து லட்சத்து 97ஆயிரத்து 602 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில், 46 ஆயிரத்து 263 நபர்கள் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த ஐந்தாயிரத்து 610 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் பலனின்றி இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா மொத்த பாதிப்பு:
- திருச்சிராப்பள்ளி - 10527
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 950
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428