தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 5,892 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் மேலும் 5,892 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் மேலும் 5,892 பேருக்கு கரோனா தொற்று உறுதி

By

Published : Sep 3, 2020, 6:09 PM IST

Updated : Sep 3, 2020, 9:47 PM IST

18:07 September 03

சென்னை: இன்று (செப்டம்பர் 3) மேலும் 5,892 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

தமிழ்நாட்டில் மேலும் 80 ஆயிரத்து 864 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டில் இருந்த 5,855 நபர்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 37 நபர்கள் என 5,892 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 

தமிழ்நாட்டில் 48 லட்சத்து 80 ஆயிரத்து 769 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 851 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது தனிமைப்படுத்தும் மையங்கள், மருத்துவமனைகளில் 52,070 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 6 ஆயிரத்து 110 பேர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 86 ஆயிரத்து 173ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் 92 நபர்கள் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7608ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் பெரும்பாலும் பிற நோய் தொற்று உள்ளவர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.  

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்: 

சென்னை - 1,38,724 

செங்கல்பட்டு - 27,286 

திருவள்ளூர் - 25,563 

காஞ்சிபுரம் - 17,818 

கோயம்புத்தூர் - 17,258 

மதுரை - 14,455 

விருதுநகர் - 12,970 

தேனி - 12,910 

கடலூர் - 12,737 

சேலம் - 12,043 

தூத்துக்குடி - 11,587 

வேலூர் - 11,217 

திருவண்ணாமலை - 10,974 

ராணிப்பேட்டை - 10,949 

திருநெல்வேலி - 9,959 

கன்னியாகுமரி - 9,913 

திருச்சிராப்பள்ளி - 7,799 

விழுப்புரம் - 7,971 

தஞ்சாவூர் - 7,026 

திண்டுக்கல் - 6,939 

கள்ளக்குறிச்சி - 6,464 

புதுக்கோட்டை - 6,350 

தென்காசி - 5,606 

ராமநாதபுரம் - 4,889 

சிவகங்கை - 4,145 

திருவாரூர் - 3,898 

ஈரோடு - 3,475 

திருப்பத்தூர் - 3,067 

திருப்பூர் - 3,018 

அரியலூர் - 2,909 

நாகப்பட்டினம் - 2,912 

நாமக்கல் - 2,355 

கிருஷ்ணகிரி - 2,322 

நீலகிரி - 1,720 

கரூர் - 1,714 

பெரம்பலூர் - 1,368 

தருமபுரி - 1,330 

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 921 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 862 

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 5,990 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

Last Updated : Sep 3, 2020, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details