தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,009 பேருக்கு கரோனா

சென்னை:தமிழ்நாட்டில் இன்று (டிச.27) 1,009 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா நிலவரம்
கரோனா நிலவரம்

By

Published : Dec 27, 2020, 8:13 PM IST

தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 27) கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக 63 ஆயிரத்து 919 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆயிரத்து 6 நபர்களுக்கும், பிகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 2 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1009 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 36 லட்சத்து 22 ஆயிரத்து 580 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் 8 லட்சத்து 14 ஆயிரத்து 170 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தோரில், ஆயிரத்து 91 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவரின் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் தனியார் மருத்துவமனையில் 3 பேர், அரசு மருத்துவமனையில் 7 பேர் என மொத்தம் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 12 ஆயிரத்து 69ஆக உயர்ந்துள்ளது. அதுபோல சென்னையில் புதிதாக 290 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 2,24,386
  • கோயம்புத்தூர் - 51980
  • செங்கல்பட்டு - 49,785
  • திருவள்ளூர் - 42494
  • சேலம் - 31444
  • காஞ்சிபுரம் - 28606
  • கடலூர் - 24,610
  • மதுரை - 20452
  • வேலூர் - 20148
  • திருவண்ணாமலை - 19102
  • தேனி - 16857
  • தஞ்சாவூர் - 17059
  • திருப்பூர் - 16904
  • விருதுநகர் - 16294
  • கன்னியாகுமரி - 16266
  • தூத்துக்குடி - 16026
  • ராணிப்பேட்டை - 15882
  • திருநெல்வேலி - 15237
  • விழுப்புரம் - 14952
  • திருச்சிராப்பள்ளி - 14097
  • ஈரோடு - 13541
  • புதுக்கோட்டை - 11376
  • கள்ளக்குறிச்சி - 10789
  • திருவாரூர் - 10875
  • நாமக்கல் - 11122
  • திண்டுக்கல் - 10866
  • தென்காசி - 8238
  • நாகப்பட்டினம் - 8079
  • நீலகிரி - 7886
  • கிருஷ்ணகிரி - 7838
  • திருப்பத்தூர் - 7414
  • சிவகங்கை - 6505
  • ராமநாதபுரம் - 6306
  • தர்மபுரி - 6366
  • கரூர் - 5123
  • அரியலூர் - 4629
  • பெரம்பலூர் - 2255


    சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 929ஆகவும், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1024 ஆகவும், ரயில் மூலம் வந்தவர்கள் 428 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:ஊழலுக்காக முதலமைச்சரே ஜெயிலுக்குப் போனது அதிமுக ஆட்சியில்தான் - துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details