மக்கள் நல்வாழ்வு துறை டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 70 ஆயிரத்து 534 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆயிரத்து 62 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 2 பேருக்கும், பிகார் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்த தலா ஒருவருக்கு என மொத்தம் 1,066 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 10 ஆயிரத்து 80ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த 1,131 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 742ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோரில் 4 பேர், அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 12,024 என உயர்ந்துள்ளது.