தமிழ்நாட்டில் மேலும் 827 பேருக்கு கரோனா உறுதி - corona confirm cases in tamilnadu
17:31 May 28
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 827 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 559 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372ஆகவும், சென்னையில் 12,762ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 145 பேர் உயிரிழந்தனர். கரோனா பாதிப்பிலிருந்து இன்று மட்டும் 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளர். மொத்தமாக இதுவரை 10,548 பேர் குணமடைந்துள்ளனர்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் 12 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று!