தமிழ்நாட்டில் மேலும் 646 பேருக்கு கரோனா உறுதி
17:48 May 26
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 646 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 510 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728ஆகவும், சென்னையில் 11,640ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 9 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 127 பேர் உயிரிழந்தனர். கரோனா பாதிப்பிலிருந்து இன்று மட்டும் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 9,342பேர் குணமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை