தமிழ்நாட்டில் மேலும் 817 பேருக்கு கரோனா உறுதி - கரோனா செய்திகள்
17:05 May 27
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 817 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 558 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 18,545ஆகவும், சென்னையில் 12,203ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 133 பேர் உயிரிழந்தனர். கரோனா பாதிப்பிலிருந்து இன்று மட்டும் 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளர். மொத்தமாக இதுவரை 9,909பேர் குணமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா நிவாரண நிதிக்கு வந்துள்ள மொத்த நிதி எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி