சென்னை :தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 692 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,693 நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 1,694 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 4 கோடியே 54 லட்சத்து 79 ஆயிரத்து 732 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 26 லட்சத்து 57 ஆயிரத்து 266 நபர்கள் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
குணமடைந்தோர் எண்ணிக்கை
அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1658 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 4 ஆயிரத்து 491 உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 10 நோயாளிகளும் என மொத்த 14 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 490ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,49,088
கோயம்புத்தூர் - 2,41,754
செங்கல்பட்டு - 1,68,317
திருவள்ளூர் - 1,17,514
ஈரோடு - 1,01,478
சேலம் - 97,859
திருப்பூர் - 92,679
திருச்சிராப்பள்ளி - 75,816
மதுரை - 74,502
காஞ்சிபுரம் - 73,792
தஞ்சாவூர் -73,090
கடலூர் - 63,264
கன்னியாகுமரி - 61,656
தூத்துக்குடி - 55,798
திருவண்ணாமலை - 54,212
நாமக்கல் - 50,393
வேலூர் - 49,314