இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"சென்னையில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு மேலும் புதிதாக ஒரு தனியார் ஆய்வகத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 155ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 81,558 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 5,951 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 25 நபர்களுக்கும் என 5,976 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 49 லட்சத்து 62 ஆயிரத்து 351 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 51 ஆயிரத்து 633 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 6,334 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 79 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 687ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:
சென்னை - 1,39,720
செங்கல்பட்டு - 27,654
திருவள்ளூர் - 25,827
காஞ்சிபுரம் - 17,973
கோயம்புத்தூர் - 17,865
மதுரை - 14,575
விருதுநகர் - 13,063
தேனி - 12,994
கடலூர் - 13,235
சேலம் - 12,285
தூத்துக்குடி - 11,633
வேலூர் - 11,352
திருவண்ணாமலை - 11,191
ராணிப்பேட்டை - 11,065
திருநெல்வேலி - 10,067
கன்னியாகுமரி - 10,022