இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், "அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஜூன் 30ஆம் தேதிக்குள் முடிவடைய உள்ள நிலையில், அதனை அடுத்தாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போது கரோனா சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு! - தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணை
சென்னை: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தை அடுத்தாண்டு ஜூன் 30 தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
tamilnadu
இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கரோனா சிகிச்சையை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை