தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை - கரோனா பாதிப்பு நிலவரம் தற்போது

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக ஆயிரத்து 391 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 938 நபர்கள் கரோனா பாதிப்பு காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

Corona status tamilnadu
கரோனா பாதிப்பு நிலவரம்

By

Published : Dec 4, 2020, 10:43 PM IST

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (டிசம்பர் 4) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களான ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் தலா ஒரு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் செயல்படுவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு அனுமதி பெற்ற ஆய்வகங்களின் எண்ணிக்கை 227ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 69 ஆயிரத்து 903 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாநிலத்திலிருத்து புதிதாக ஆயிரத்து 387 நபர்களுக்கு, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தலா ஒருவர் என மொத்தம் ஆயிரத்து 391 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 933 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதிலிருந்து 7 லட்சத்து 87 ஆயிரத்து 554 நபர்கள் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என கண்டறியப்பட்டது.

இவர்களில் தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 10 ஆயிரத்து 938 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த ஆயிரத்து 426 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 64 ஆயிரத்து 854 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 8, அரசு மருத்துமனையில் 7 நோயாளிகள் என 15 நபர்கள் சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 762 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு நிலவரம்

சென்னை - 2,16,867

கோயம்புத்தூர் - 49,291

செங்கல்பட்டு - 47,991

திருவள்ளூர் - 41,216

சேலம் - 30,166

காஞ்சிபுரம் - 27,814

கடலூர் - 24,302

மதுரை - 19,832

வேலூர் - 19,485

திருவண்ணாமலை - 18,741

தேனி - 16,632

தஞ்சாவூர் - 16,545

விருதுநகர் - 15,958

தூத்துக்குடி - 15,734

கன்னியாகுமரி - 15,783

ராணிப்பேட்டை - 15,659

திருநெல்வேலி - 14,932

விழுப்புரம் - 14,675

திருப்பூர் - 15,638

திருச்சிராப்பள்ளி - 13,521

ஈரோடு - 12,603

புதுக்கோட்டை - 11,169

கள்ளக்குறிச்சி - 10,687

திண்டுக்கல் - 10,407

திருவாரூர் - 10,521

நாமக்கல் - 10,527

தென்காசி - 8,117

நாகப்பட்டினம் - 7,709

திருப்பத்தூர் - 7,288

நீலகிரி - 7,533

கிருஷ்ணகிரி - 7,460

ராமநாதபுரம் - 6,222

சிவகங்கை - 6,351

தருமபுரி - 6,124

அரியலூர் - 4,578

கரூர் - 4,871

பெரம்பலூர் - 2,246

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 927

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1004

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏழை நாடுகளுக்கு உதவி செய்யும் சிங்கப்பூர்!

ABOUT THE AUTHOR

...view details