திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு-வின் மகன் டி.ஆர்.பி.ராஜாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் உடல் வலி இருந்துள்ளது என்று கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார், டி.ஆர்.பி. ராஜா. அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று தாக்கம் குறைவாக இருப்பதாலும், லேசான அறிகுறிகள் என்பதாலும் சென்னை தனியார் மருத்துவமனை அறிவுறுத்தலின்படி வீட்டில் டி.ஆர்.பி.ராஜாவை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கரோனா! - Chennai District News
சென்னை: திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
டி.ஆர்.பி ராஜா