சென்னையில் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அதுமட்டுமின்றி பிற மாவட்டங்களில் சென்னைக்கு வருபவர்களில் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தைக் கடந்துவருகிறது.
இதுவரையிலும் சென்னை மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 677 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 819 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ள 13 ஆயிரத்து 255 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரண்டாயிரத்து 603 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
நேற்று மட்டும் ஆயிரத்து 278 நபர்கள் சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும் நேற்று ஒரே நாளில் மாநகராட்சி 13 ஆயிரத்து124 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் படி,
கோடம்பாக்கம் - 14547 பேர்
அண்ணா நகர் - 14510 பேர்
ராயபுரம் - 12947 பேர்
தேனாம்பேட்டை - 12623 பேர்