தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிவர் புயல்: முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை - கரோனா பரிசோதனை

சென்னை: மாநகராட்சி நிவாரண முகாமில் தங்கவைத்திருந்த 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயல்
Medical camp

By

Published : Nov 28, 2020, 8:34 PM IST

நிவர் புயலின் தாக்கத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (நவ 24-27) தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது, குறிப்பாக சென்னையில் சீரான இடைவெளியில் மிக கனமழை பதிவாகியது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையைத் திறக்க பொதுப்பணித் துறை முடிவு எடுத்தது.

மேலும் அடையாறு கரையோரம் தங்கியிருக்கும் மக்களை மீட்டு மாநகராட்சி நிவாரண முகாமில் தங்கவைத்தனர். அதுமட்டுமின்றி ஆதரவற்றவர்களையும் மாநகராட்சி நிவாரண முகாமில் தங்கவைத்தனர்.

தற்போது நிலவரப்படி 13 நிவாரண முகாமில் ஆயிரத்து 400 நபர்கள் தங்கிவருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசிய பொருள்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுவருகின்றன.

இது தொடர்பாக தகவல் அளித்த மாநகராட்சி உதவி ஆணையர் மேகநாதன் ரெட்டி, "13 நிவாரண முகாமில் ஆயிரத்து 400 நபர்கள் தங்கிவருகின்றனர், பலர் அவர்கள் சொந்த வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். மீதம் உள்ளவர்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசிய பொருள்கள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுவருகின்றன. வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும் நிவாரண முகாமில் மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது, தங்கியிருந்த நபர்களுக்கு சிறு காய்ச்சல், உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்களுக்கு மருத்துவ முகாம் மூலம் பரிசோதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கரோனா அறிகுறி இருந்த 300-க்கும் மேற்பட்டோரிடமிருந்து கரோனா மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details