தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே நாளில் 10 ஆயிரத்து 48 பேருக்கு கரோனா பரிசோதனை! - corona positive cases today

சென்னை: நேற்று (ஜூலை13) ஒரே நாளில் 10 ஆயிரத்து 48 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

corona
corona

By

Published : Jul 13, 2020, 2:10 PM IST

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையை பொருத்தவரையில், ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவிக நகர் உள்ளிட்ட இடங்களில் கரோனா தாக்கம் அதி தீவிரமாக உள்ளது. இதன் பரவலைத் தடுக்க மாநகராட்சியால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

அந்த வகையில், சென்னை மண்டலங்களில் உள்ள கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதுவரை சென்னை 15 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 77 ஆயிரத்து 338 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 58 ஆயிரத்து 615 நபர்கள் குணமடைந்துள்ளனர். நாளுக்கு நாள் நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில் சென்னையில் 10 ஆயிரத்து 048 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 168 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 253 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்டல வாரியான கரோனா பாதிப்பு

  • ராயபுரம் - 9624
  • தண்டையார்பேட்டை - 8217
  • தேனாம்பேட்டை - 8604
  • கோடம்பாக்கம் - 8671
  • அண்ணா நகர் - 8635
  • திருவிக நகர் - 6122
  • அடையாறு - 4942
  • வளசரவாக்கம் - 3821
  • அம்பத்தூர் - 3723
  • திருவெற்றியூர் - 2970
  • மாதவரம் - 2456
  • ஆலந்தூர் - 2136
  • பெருங்குடி - 1994
  • சோளிங்கநல்லூர் - 1685
  • மணலி - 1407

இதையும் படிங்க:தமிழ்நாடு மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details