தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு! - ஆர்டிபிசிஆர்

சென்னை விமானநிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ஆர்டிபிசிஆர் கரோனா பரிசோதனைக் கட்டணம் ரூ.4 ஆயிரத்திலிருந்து, ரூ.3 ஆயிரத்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலைய கரோன பரிசோதனை கட்டண பலகை
சென்னை விமான நிலைய கரோன பரிசோதனை கட்டண பலகை

By

Published : Sep 7, 2021, 3:55 PM IST

சென்னை: சென்னையின் பன்னாட்டு விமானநிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கும், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் ஆகியோருக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்கள் தலைமையில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளுக்கு மூன்று விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வரிசையில் நின்றிருக்கும் பயணிகள்

மூன்று வித கட்டண பரிசோதனை முறைகள்:

முன்னர் ஆர்டிபிசிஆரின் சாதாரண பரிசோதனைக்கு ரூ.1,200 கட்டணமாக வசூலிக்கப்பட்டு, பின்னர் அந்த தொகையானது ரூ.900மாக குறைக்கப்பட்டது. இந்தக் கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் 8 மணி நேரத்தில் வெளியிடப்பட்டன.

இரண்டாவதாக ரூ.2 ஆயிரத்து 500க்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள், 4 மணி நேரத்திற்குள் வெளியாகின. பின்னர் மூன்றாவதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரேப்பிட் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கருவிகள் செயல்பாட்டுக்கு வந்தன.

இதையடுத்து, பரிசோதனை முடிவுகள் சுமார் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் வெளிவந்தன.

சென்னை விமான நிலைய கரோன பரிசோதனை கட்டண பலகை

ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படும் இந்த மூன்றாவது கட்டண முறையில், அவசரகதியில் விமானப் பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் பரிசோதனை மேற்கொண்டனர்.

கரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

தொடர்ந்து அரபு நாடுகளான துபாய், சாா்ஜா, அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகள், ரூ.4 ஆயிரம் செலுத்தி மேற்கொள்ளப்படும் சோதனையில் பரிசோதித்தால் மட்டுமே, விமான பயணத்துக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டது.

இது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதால், பரிசோதனை கட்டணத்தை குறைக்கவோ அல்லது பிற இரு கட்டண முறைகளில் பரிசோதிக்கவோ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (செப்.7) தமிழ்நாடு சுகாதாரத்துறை, விமானநிலைய அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, ரேப்பிட் ஆர்டிபிசிஆர் கட்டணத்தொகையை ரூ.4 ஆயிரத்திலிருந்து, ரூ.3 ஆயிரத்து 400 ஆக குறைத்துள்ளனர். கரோனா பரிசோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details