கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த மாணவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதனால், ரயில்வே உயர் அலுவலர்கள் உத்தரவின் பேரில் ரயில் நிலையங்களில் கரோனா குறித்த விழிப்புணர்வு மருத்துவ முகாம் அமைத்து பொதுமக்களைப் பரிசோதிக்க எழும்பூர் ரயில் நிலையத்தில் இன்று செவிலியருடன் இணைந்து ரயில்வே காவல் துறையினர் பயணிகளை தெர்மல் ஸ்கீரினிங் கருவியைக் கொண்டு கரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா எனப் பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் கரோனா குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை ரயில் பயணிகளுக்கு அளித்தனர். பின்னர் ரயில்வே காவல் துணைக் கண்காணிப்பாளர் எட்வர்ட் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளைப் பரிசோதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.