சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் என்ற வைரசை தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த மருத்துவ அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பெங்களூருவில் இருந்து வந்த சதாப்தி விரைவு ரயில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒமைக்ரான் அச்சம்
ஏற்கனவே, பெங்களூருவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை விமான நிலையங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Sexual Harassment Case: கல்லூரி காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை