சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ’தமிழ்நாட்டில் மேலும் 33 ஆயிரத்து 899 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 92 நபர்களுக்கும் என 2 ஆயிரத்து 93 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 66 லட்சத்து 25 ஆயிரத்து 662 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் 35 லட்சத்து 26 ஆயிரத்து 351 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது. தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 504 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.