தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதுமட்டுமின்றி கரோனா அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டுபிடிக்க, வீடு வீடாக நேரில் சென்று சுகாதார ஊழியர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
திருவொற்றியூர் மண்டலத்தில் ராதாகிருஷ்ணன் ஆய்வு இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள அம்பேத்கர் நகரின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அப்பகுதி மக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் யாருக்காவது இருக்கிறதா என்பதை நேரடியாகக் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க:எஜமானரைக் காப்பாற்ற நாட்டு வெடிகுண்டை கவ்விய நாய்க்குட்டி!