ஊராடங்கால் வாழ்வாதாரம் இழந்த குடும்ப அடையாள அட்டையுள்ள திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
பின்னர் குடும்ப அடையாள அட்டை இல்லாத திருநங்கைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சமூக நலத் துறை சார்பில் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அமைச்சர் சா.மு. நாசர் பங்கேற்று 222 திருநங்கைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார்.
தொடர்ந்து சத்யவாணி முத்து திட்டத்தின்கீழ் 125 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ் மாவட்டத்தின் 11 நபர்களுக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.