தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தொற்றிலிருந்தது குணமடைந்தவர்கள் 90 சதவிகிதமாக அதிகரிப்பு! - Corona recovery patients count increased

சென்னை : கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விழுக்காடு 90ஆக உயர்த்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Corona recovery patients count increased at 90 per cent said chennai corporation
Corona recovery patients count increased at 90 per cent said chennai corporation

By

Published : Sep 6, 2020, 2:38 PM IST

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

ராயபுரம், தண்டையார்பேட்டையில் தற்போது அதன் பரவல் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பரவல் அதிகமாக உள்ளது. இந்தப் பரவலைக் கட்டுப்படுத்த அப்பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

ஒருபுறம், நோய் தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மற்றொருபுறம் அதிகரித்து வருகிறது. தற்போது குணமடைத்தவர்களின் விழுக்காடு 90ஆக உயர்த்துள்ளது. அதேபோல் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் விழுக்காடும் ஒன்பதாகக் குறைந்துள்ளது.

இதுவரையிலும் சென்னை மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 685 நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 428 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 412 நபர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் இரண்டாயிரத்து 845 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குணமடைந்தவர்களின் மண்டல வாரியான பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

கோடம்பாக்கம் - 14335 பேர்

அண்ணா நகர் - 14294 பேர்

ராயபுரம் - 12615 பேர்

தேனாம்பேட்டை - 12377 பேர்

தண்டையார்பேட்டை - 10998 பேர்

திரு.வி.க. நகர் - 9596 பேர்

அடையாறு - 9664 பேர்

வளசரவாக்கம் - 7864 பேர்

அம்பத்தூர் - 8771 பேர்

திருவொற்றியூர் - 4104 பேர்

மாதவரம் - 4489 பேர்

ஆலந்தூர் - 4511 பேர்.

சோழிங்கநல்லூர் - 3433 பேர்

பெருங்குடி - 4034 பேர்

மணலி - 2040 பேர்

ABOUT THE AUTHOR

...view details