தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: விதிமீறும் திருமண மண்டபங்கள் மீது கடும் நடவடிக்கை! - etv bharat

கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடவடிக்கை
நடவடிக்கை

By

Published : Aug 30, 2021, 10:17 PM IST

சென்னை: இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சிக்கு அதன் உரிமையாளர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டபம் உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.

மாநகராட்சி அலுவலர்களின் கள ஆய்வின்போது நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை எனில் மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் செப். 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details