தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தீவிரப்படுத்தப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கை - காய்ச்சல் சோதனை மையம்

சென்னை: பெருநகர சென்னை, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தடுப்பு  நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

tamil-nadu-government
tamil-nadu-government

By

Published : Jun 30, 2020, 3:30 PM IST

Updated : Jun 30, 2020, 3:38 PM IST

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அலுவலர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் (Contact tracing) கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் விவரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர, சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் (Fever clinic) செயல்படுவதுடன், நான்காயிரத்து 925 காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.

இதன்மூலம் 15ஆயிரத்து 119 நபர்களுக்கு கரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது. இவர்களில் மூன்றாயிரத்து 189 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்கப்படுகின்றது. இதே போன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை பெருநகர், அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொற்று அறிகுறி உள்ள எட்டாயிரத்து 720 நபர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஆயிரத்து 389 நபர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அனைவரும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

Last Updated : Jun 30, 2020, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details