தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மக்களுக்காக 50 ஆயிரம் படுக்கை வசதி கொண்ட மையம் தயார்

சென்னை: மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் வாழும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்காக 50 ஆயிரம் படுக்கைகளை கொண்ட மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

corona prevention measures meet held in minister velumani office
corona prevention measures meet held in minister velumani office

By

Published : Jul 2, 2020, 8:01 PM IST

கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அவரது முகாம் அலுவலகத்தில் இன்று (ஜூலை 2) நடைபெற்றது. இதில், குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் கரோனா வைரஸ் தடுப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 124 கரோனா வைரஸ் கட்டுப்பாடு மண்டலங்கள் உள்ளது.

மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 50 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய மையங்கள் தயார்நிலையில் உள்ளன. இந்த தனிமைப்படுத்தும் மையங்களில் சுமார் 10 ஆயிரம் நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரத்து 979 குடிசைப் பகுதிகளில் வாழும் 30 லட்சம் மக்களுக்கு 98 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் முகக் கவசம் மற்றும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து அம்மா உணவகங்களிலும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுவரையிலும் பொதுமக்களுக்கு 9 லட்சத்து 31 ஆயிரத்து 863 கபசுர குடிநீர் பாக்கெட்டுகள், 85 ஆயிரம் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு 44.35 லட்சம் முகக் கவசங்கள் 2.81 லட்சம் கையுறைகள் ஆறாயிரத்து 180 ஒளிரும் கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகரத்தில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்து 200 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 30 கரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கும் மையங்கள், 10 நடமாடும் பரிசோதனை மாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து மையங்களிலும் இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 545 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details