தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் ஆலோசனை - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

தலைமைத் தேர்தல் அலுவலர் ஆலோசனை
தலைமைத் தேர்தல் அலுவலர் ஆலோசனை

By

Published : Apr 22, 2021, 1:23 AM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், வாக்கு எண்ணும் மையங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல் துறையினர், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தகுந்த இடைவெளி விட்டு மேசைகள் அமைப்பது, வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு அளிப்பது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தினமும் இந்திய தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்ரல்.22) ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் வே.ராஜாராமன், இணை தலைமைத் தேர்தல் அலுவலர் த.ஆனந்த், அஜய் யாதவ், வே.மணிகண்டன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க: 'மக்கள் உயிரை எப்படி காக்கப்போகிறார் என பிரதமர் பதிலளிக்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details