இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புகளாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மாநகராட்சி சார்பில் தினசரி நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் பல்வேறு நவீன இயந்திர உபகரணங்களை கொண்டு 25 ஆயிரம் தெருக்கள், சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொற்று நோய் கண்டறியப்பட்ட நபர்கள் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக 395 கைத்தெளிப்பான், 296 பெட்ரோல் மூலம் இயங்கும் பவர் ஸ்ப்ரேயர், 200 சிறிய புகை பரப்பும் இயந்திரம், 30 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரம், 15 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட கிருமி நாசினி, தெளிப்பான்கள் 174 வாகனங்கள் பொருத்தப்பட்ட கிருமி நாசினி தெளிப்பான்கள் 7 வாகனங்களில் பொருத்தப்பட்ட சின்டெக்ஸ் கிருமி நாசினி தெளிப்பான்கள், அதிக செயல்திறன் கொண்ட 8 கனரக வாகன கிருமி நாசினி தெளிப்பான்கள், 12 ஜெட்ராடிங் எந்திரங்கள் மற்றும் 23 தீயணைப்பு துறை வாகனங்கள் என மொத்தம் 1160 இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.