கரோனா பரவலைத் தடுப்பதற்கு சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தினமும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி, 395 மருத்துவ முகாம்கள் இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றன. இதில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 51, திருவிக நகரில் 46 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
கரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 395 மருத்துவ முகாம்கள்! - சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சி முழுவதும் இன்று (ஆகஸ்ட் 2) ஒரே நாளில் 395 மருத்துவ முகாம்கள் நடைபெற்றதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![கரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 395 மருத்துவ முகாம்கள்! Corona prevention: 395 medical camps in Chennai today!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:06:26:1596382586-tn-che-03-medical-camp-script-image-7209208-02082020210202-0208f-1596382322-887.jpg)
இவற்றின் மூலம் 14 ஆயிரத்து 880 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் ஆயிரத்து 1,317 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாள்தோறும் நடைபெறும் மருத்துவ முகாமை அமைச்சர்கள், சுகாதாரத் துறை செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் மே மாதம் முதல் இன்று வரை மொத்தம் 26 ஆயிரத்து 632 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில் 15 லட்சத்து 39 ஆயிரத்து 385 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.