தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளும் சீல் வைக்கப்பட்டு கிருமிநாசனி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க கரோனாவுக்கு எதிராக போராடும் களப்பணியாளர்களுக்கு அதிகளவில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சென்னையில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு கரோனா - corona virus
சென்னை: சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதால் கிருமி நாசினி தெளித்து காவல் நிலையம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் திருநீர்மலையைச் சேர்ந்த பாலமுருகன் (45) என்பவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, சங்கர் நகர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. காவலருக்கு கரோனா உறுதியானதால் அவருடன் பணிபுரியும் சக காவலர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.