தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் அலுவலகத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று! - chief minister edappadi palaniswamy
சென்னை: முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் துணைச் செயலர் உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Breaking News
இந்நிலையில், முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் துணைச் செயலர், 2 அலுவலக உதவியாளர்கள், ஓட்டுநர் என நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் தான், கரோனா தொற்று பாதிப்பால், முதலமைச்சரின் அலுவலகத் தனிச் செயலாளர் தாமோதரன் மறைந்தது குறிப்பிடத்தக்கது.