தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 2 முகவர்களுக்கு கரோனா பாசிட்டிவ் - சென்னையில் 2 முகவர்களுக்கு கரோனா பாசிட்டிவ்

சென்னை: சென்னையில் உள்ள மூன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு விண்ணப்பித்த முகவர்கள் கரோனா பரிசோதனை செய்ததில் இரண்டு முகவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 2 முகவர்களுக்கு கரோனா பாசிட்டிவ்
சென்னையில் 2 முகவர்களுக்கு கரோனா பாசிட்டிவ்

By

Published : Apr 30, 2021, 10:46 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நாளை மறுநாள் (மே 2) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்துவருவதால் வாக்கு எண்ணிக்கைக்கு விண்ணப்பித்த முகவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மூன்று வாக்குச்சாவடிக்கு விண்ணப்பித்த 395 முகவர்களுக்கு சென்னை ராயபுரத்தில் உள்ள மருத்துவமனையில் கரோனா மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட நிலையில் இவர்கள் வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வரும் வேட்பாளர்கள், முகவர்கள், அலுவலர்கள் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details