தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் அதிதீவிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில தினங்களாக ராயபுரத்தில் நோய்தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்போது தண்டையார்பேட்டையில் தினசரி 150க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தண்டையார்பேட்டையில் ஜூன் 6ஆம் தேதி 174 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 189 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் கடந்த சனிக்கிழமை நேரில் சென்று கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார். தண்டையார்பேட்டையில் சில பகுதிகளில் மட்டுமே நோய் தொற்று அதிகரித்துவருகிறது, பல பகுதிகளில் நோய்தொற்று கட்டுக்குள் வந்துவிட்டது என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி,
ராயபுரம் - 3859 பேர்
திரு.வி.க. நகர் - 2167 பேர்
வளசரவாக்கம் - 1054 பேர்
தண்டையார்பேட்டை - 2835 பேர்
தேனாம்பேட்டை - 2518 பேர்