தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (மே 22) வரை 14,753ஆக இருந்த நிலையில் இன்று மட்டும் 710 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் 624 பேரும், செங்கல்பட்டில் 39 பேரும், திருவள்ளூரில் 17 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 98 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மட்டும் 50 வயதை கடந்த நான்கு ஆண்கள், ஒரு பெண் உள்பட ஐந்து பேர் உயரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது.