சென்னையின் கரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், ”தமிழ்நாட்டிலுள்ள 29 ஆய்வகங்களில் 19 ஆயிரத்து 242 நபர்களுக்கு சளி மற்றும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்த 1,454 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 61 நபர்களுக்கும் என 1,515 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் ஆயிரத்திற்கும் குறைவாக பதிவான கரோனா பாதிப்பு!
சென்னை: கடந்த ஒரு வாரமாக ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த கரோனா தொற்று இன்று ஆயிரத்திற்குள் அடங்கியது ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஏழு லட்சத்து 48 ஆயிரத்து 244 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 48 ஆயிரத்து 19 பேர் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 20 ஆயிரத்து 706 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சையில் குணமடைந்த 1,438 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 ஆயிரத்து 782 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இரண்டாயிரத்து 444 பேரும், 60 வயதிற்கு உட்பட்டவர்கள் 39 ஆயிரத்து 911 நபர்களும், அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஐந்தாயிரத்து 664 நபர்களும் நோயினால் பாதிக்கபட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் சென்னையில் தொடர்ந்து ஆயிரத்திற்கும்மேல் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று (ஜூன் 16) சற்று குறைந்து 919 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நோயினால் பாதிக்கப்பட்டு, இறந்தவர்களில் மூன்று நபர்களுக்கு கரோனா தவிர வேறு நோய்கள் எதுவும் இல்லை. 46 நபர்கள் வைரஸ் தொற்றுடன் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 443 நபர்கள் வந்துள்ளனர். அவர்களில் இரண்டாயிரத்து 221 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சர்வதேச விமானத்தில் 215 பேர், உள்நாட்டு விமானத்தில் 99 பேர், ரயில் மூலம் வந்தவர்கள் 327 பேர் ஆவர்.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு
மாவட்டம் | பாதிப்பு எண்ணிக்கை |
சென்னை | 34,245 |
செங்கல்பட்டு | 3108 |
திருவள்ளூர் | 1,945 |
காஞ்சிபுரம் | 803 |
திருவண்ணாமலை | 768 |
கடலூர் | 568 |
திருநெல்வேலி | 507 |
மதுரை | 464 |
விழுப்புரம் | 458 |
தூத்துக்குடி | 437 |
அரியலூர் | 397 |
ராமநாதபுரம் | 156 |
தென்காசி | 157 |
தேனி | 157 |
தஞ்சாவூர் | 161 |
நாகப்பட்டினம் | 166 |
வேலூர் | 171 |
திருச்சிராப்பள்ளி | 179 |
கோயம்புத்தூர் | 183 |
விருதுநகர் | 188 |
சேலம் | 231 |
திண்டுக்கல் | 234 |
ராணிப்பேட்டை | 311 |
கள்ளக்குறிச்சி | 338 |
பெரம்பலூர் | 148 |
திருவாரூர் | 148 |
கன்னியாகுமரி | 123 |
திருப்பூர் | 117 |
நாமக்கல் | 90 |
ஈரோடு | 73 |
கரூர் | 95 |
புதுக்கோட்டை | 62 |
சிவகங்கை | 55 |
கிருஷ்ணகிரி | 41 |
தருமபுரி | 20 |
திருப்பத்தூர் | 43 |
நீலகிரி | 17 |
இதையும் படிங்க: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி