தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் அதிதீவிரம் காட்டும் கரோனா! - கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின்எண்ணிக்கை

சென்னை: கரோனா தொற்றுக்கு சென்னையில் ஏழு மண்டலங்களில் ஆளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று
கரோனா தொற்று

By

Published : Jun 6, 2020, 4:05 PM IST

கரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் அதிதீவிரமாக உள்ளது. தினமும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவருகிறது. நேற்று ( ஜூன்.5) மட்டும் எந்த அளவிலும் இல்லாத அளவுக்கு 1,116 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மண்டலத்தில் 3 ஆயிரத்தை கடந்துள்ளது. 3 மண்டலங்களில், 2 ஆயிரத்தையும், மேலும் 3 மண்டலங்களில் ஆயிரத்தையும் கடந்துள்ளது. இந்தப் பரவலை தடுக்க மாநகராட்சி புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் நோய் குறையவில்லை. இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

மண்டலம் பாதிப்பாளர்கள் எண்ணிக்கை
ராயபுரம் 3,552
திரு.வி.க. நகர் 1,958
வளசரவாக்கம் 996
தண்டையார்பேட்டை 2,470
தேனாம்பேட்டை 2,245
கோடம்பாக்கம் 2,202
மணலி 274
சோழிங்கநல்லூர் 362
அடையாறு 1,094
அண்ணா நகர் 1,784
மாதவரம் 536
திருவொற்றியூர் 731
அம்பத்தூர் 733
பெருங்குடி 365
ஆலந்தூர் 314

சென்னை மாவட்டத்தில் 15 மண்டலங்களில் மொத்தம் 19 ஆயிரத்து 826 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 ஆயிரத்து 156 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details