தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிகாக 1,385 பேருக்கு கரோனா பாதிப்பு! - தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 22) மேலும் 1,385 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

corona
corona

By

Published : Mar 22, 2021, 8:59 PM IST

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக 73 ஆயிரத்து 27 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,382 நபர்களுக்கும் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவர், கர்நாடகா, கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவர் என 1,385 நபர்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 85 லட்சத்து 34 ஆயிரத்து 311 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் எட்டு லட்சத்து 68 ஆயிரத்து 367 நபர்கள் கரோனா தீநுண்மி தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் எட்டாயிரத்து 619 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 22) 659 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 139 என உயர்ந்துள்ளது. அதே போல் அரசு மருத்துவமனையில் 5 பேர், தனியார் மருத்துவமனையில் 5 பேர், என மொத்தம் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 609 என உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக மேலும் 496 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 130 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 126 நபர்களுக்கும் தஞ்சாவூரில் 83 நபர்களுக்கும் திருவள்ளூரில் 62 நபர்களுக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் தீநுண்மி நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை

சென்னை - 2,42,115

கோயம்புத்தூர் - 57,267

செங்கல்பட்டு - 54,469

திருவள்ளூர் - 45,176

சேலம் - 33,085

காஞ்சிபுரம் - 29,980

கடலூர் - 25,388

மதுரை - 21,498

வேலூர் - 21,247

திருவண்ணாமலை - 19,587

திருப்பூர் - 18,899

தஞ்சாவூர் - 18,860

தேனி - 17,231

கன்னியாகுமரி - 17,310

விருதுநகர் - 16,769

தூத்துக்குடி - 16,443

ராணிப்பேட்டை - 16,320

திருநெல்வேலி - 15,900

விழுப்புரம் - 15,358

திருச்சி - 15,257

ஈரோடு - 15,082

புதுக்கோட்டை - 11,756

நாமக்கல் - 11,946

திண்டுக்கல் - 11,702

திருவாரூர் - 11,625

கள்ளக்குறிச்சி - 10,920

தென்காசி - 8,636

நாகப்பட்டினம் - 8,805

நீலகிரி - 8,522

கிருஷ்ணகிரி - 8,297

திருப்பத்தூர் - 7,704

சிவகங்கை - 6,887

ராமநாதபுரம் - 6,505

தருமபுரி - 6,721

கரூர் - 5,582

அரியலூர் - 4,777

பெரம்பலூர் - 2,300

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் -966

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,047

ரயில் மூலம் வந்தவர்கள் -428

ABOUT THE AUTHOR

...view details