சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சுமிதா என்னும் பெண்ணின் உடல் 8ஆவது மாடியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அவர் நோய்தொற்றால் உயிரிழந்ததாக தெரியவந்தது.
பணத்திற்காக கரோனா நோயாளி கொலை! - சென்னை மாவட்ட செய்திகள்
16:44 June 15
சென்னை: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 8ஆவது மாடியில் உயிரிழந்து கிடந்த பெண்ணின் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது. அதாவது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமனையில் ஒப்பந்த ஊழியராக பணியற்றி வரும் ரதிதேவி என்பவர் செல்போன், பணத்திற்காக சுமிதாவை கொலை செய்து, அவரது உடலை 8ஆவது மாடியில் கொண்டு போட்டது தெரியவந்துள்ளது.
தற்போது ரதிதேவியை கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரேசில்- கணவனின் அந்தரங்க உறுப்பை சமைத்த மனைவி!