தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் படுக்கைகள் காலி: நாற்காலியில் அமர்ந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகள்! - மருத்துவமனையில் படுக்கைகள் காலி

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால் தரையில் படுத்தும், நாற்காலியில் அமர்ந்தபடியும் கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Corona patient suffer for  lack of beds
Corona patient suffer for lack of beds

By

Published : May 13, 2021, 2:49 PM IST

புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 69ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதால் அங்கு படுக்கை வசதிகள் குறைந்துள்ளன.

அரசு மருத்துவமனைகளிலும் அதிகளவு நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால், போதிய இடைவெளியின்றி படுக்கைகள் போடப்பட்டுள்ளன. அதனையும் மீறி நோயாளிகள் வருவதால் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மீறி வருபவர்கள் நாற்காலியில் அமர வைத்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறார்கள்.

இதனால், நோயாளிகளை சரிவர கவணிக்க இயலவில்லை என்றும், இடவசதி செய்து தர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகமும், பொதுமக்களும் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details