நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், “கரோனா வைரஸ் காரணமாக அச்சமாக இருக்கிறது. வீட்டுக்குப் போனாலும் உடனே குளிக்கச் சொல்கிறார்கள். எனவே போகப்போக தனிமைப்படுத்திவிடுவார்களோ என்ற நிலைமை இருக்கிறது. இப்படியான சூழலில் பேரவையை நடத்த வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமசாமியும், கரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு பேரவை நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முழுவீச்சுடன் செயல்படுத்திவருகிறது. நோய் வருவது இயற்கை. ஆனால் தற்போது வந்துள்ள வைரஸ் அபாயகரமான நோய்தான்.
இருந்தாலும் தேவையான நடவடிக்கைகள் பேரவையிலும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அனைவரும் பரிசோதிக்கப்பட்டுதான் பேரவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே பேரவை நிகழ்வுகளை ஒத்திவைக்கவேண்டிய அவசியமில்லை" என்றார்.
இதையும் படிங்க...சட்டப்பேரவை நிகழ்வுகள்: உடனுக்குடன் வழங்குகிறது நமது ஈடிவி பாரத்