கரோனா வைரஸ் (தீநுண்மி) அச்சுறுத்தலுக்கு மத்தியில் வருகின்ற 14ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதனால், கூட்டத்தொடரில் பங்கேற்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை வளாக அலுவலர்கள், பத்திரிகையாளர் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.