சென்னை: கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அதில் விதிவிலக்கல்ல. குறிப்பாக சென்னையில் இதுவரை 5 லட்சத்து 37 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 435 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் 8 ஆயிரத்து 312 பேர் இறந்துள்ளனர். முதல் அலையின்போது தடுமாறிய சென்னை, இரண்டாவது அலையில் விழித்துக் கொண்டது.
சென்னை மாநகராட்சி மிக சிறப்பாக நடவடிக்கையால் ஒரு மாதத்திற்குள் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், கரோனா பாதிப்பை நினைவுகூறும் வகையில் கரோனா பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.