கரோனா வைரஸ் தமிழ்நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் அவற்றை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக கரோனா நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்க சானிடைசரை உபயோகித்து வருகின்றனர்.
இதனால் மருந்துக் கடைகளில் சானிடைசரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன. அதனடிப்படையில் பதுக்கி வைத்தாலோ, கூடுதல் விலைக்கு முகக்கவசம், கிருமி நாசினி மருந்துகளை விற்றாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினர் மருந்துக் கடைகளில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.