கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து சேவையும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வேலைகள் தடைபட்டுள்ளது.
குறிப்பாக போக்குவரத்து சேவையில்லாததால், நோயாளிகள் மருத்துவமனைகளுக்குச் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.
ஊரடங்கால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கும் நோயாளிகளுக்கும் உதவும் தன்னார்வலர்! அந்த வகையில், அம்பத்தூரைச் சேர்ந்த சற்குரு செந்தில் என்ற தன்னார்வலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் அவசர தேவைக்கு அணுகினால் மருத்துவமனைக்குக் காரில் இலவசமாக அழைத்துச் செல்லப்படும் என அறிவித்துள்ளார்.
இதனையறிந்து நோயாளிகளும், கர்ப்பிணிகளும் மருத்துவமனைக்குச் செல்ல அவரை அணுகியுள்ளனர். இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களை சற்குரு செந்தில் மருத்துவமனையில் சேர்த்து உதவி செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க...இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!