தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செப்டம்பர் இறுதியில் சிம்புவின் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு - சிலம்பரசன்

சிம்பு நடிப்பில் உருவாக உள்ள கொரோனா குமார் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.

corona kumar movie update  corona kumar  corona kumar movie  silambarasan  simbu latest movie  director gokul  cini news  chennai news  chennai latest news  cinema news  cinema update  latest movie  movie update  simbu movie update  கொரோனா குமார்  கொரோனா குமார் திரைப்படம்  கொரோனா குமார் திரைப்படத்தின் அப்டேட்  புதிய படங்கள்  சிம்பூவின் புதிய படம்  சிம்பு  சிலம்பரசன்  சென்னை செய்திகள்
simbu

By

Published : Aug 24, 2021, 7:36 PM IST

‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஜுங்கா’ போன்ற படங்களை இயக்கியவர் கோகுல். இவர் தற்போது 'கொரோனா குமார்' என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் அதிகம் பேசப்பட்ட படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, மொட்டை ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் வசனங்கள், காட்சிகள், கதாபாத்திரங்கள் அனைவரையும் ஈர்த்தது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இதையடுத்து கோகுல் இயக்கிய “ஜுங்கா” படம் ரசிகர்கள் எதிர்பார்த்த வகையில் இல்லை. இந்நிலையில் தற்போது கரோனா குறித்து நகைச்சுவை பாணியில் “கொரோனா குமார்” என்ற படத்தினை இயக்க உள்ளார்.

கொரோனா குமார்

முதலில் இப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் சினிமாவாலா பிக்சர்ஸ் சதீஷ் தயாரிப்பதாக இருந்த நிலையில், தற்போது வேல்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் தொடங்க உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சஞ்சனா, ராகினி வழக்கு: போதை மருந்து எடுத்துக்கொண்டது உறுதி

ABOUT THE AUTHOR

...view details