தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா - கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கரோனா

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி!
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

By

Published : Jul 28, 2022, 12:01 PM IST

சென்னை:44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளைச் சார்ந்த 2,000 மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் நான்கு பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:நான் விரும்பும் விளையாட்டு செஸ்- ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details