தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 452 பேருக்கு கரோனா உறுதி! - கரோனா வைரஸ் தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 452 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு
Corona infection

By

Published : Feb 22, 2021, 7:10 AM IST

தமிழ்நாட்டில் மேலும் 452 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (பிப்ரவரி 21) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 49 ஆயிரத்து 995 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 450 நபர்களுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களுக்கு என 452 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 68 லட்சத்து 5 ஆயிரத்து 946 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 48 ஆயிரத்து 275 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறிய முடிந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4,109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 460 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 31 ஆயிரத்து 706 என உயர்ந்துள்ளது.

இதில் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துமனையில் மேலும் மூன்று பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 460 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:

சென்னை: 2,34,345

கோயம்புத்தூர்:55,460

செங்கல்பட்டு:52,446

திருவள்ளூர்: 44,058

சேலம்: 32,664

காஞ்சிபுரம்:29,462

கடலூர்:25,110

மதுரை:21,193

வேலூர்:20,929

திருவண்ணாமலை:19,461

திருப்பூர்:18,245

தேனி:17,143

தஞ்சாவூர்:17,987

கன்னியாகுமரி:17,035

விருதுநகர்:16,642

தூத்துக்குடி:16,335

ராணிப்பேட்டை:16,204

திருநெல்வேலி:15,699

விழுப்புரம்:15,247

திருச்சிராப்பள்ளி:14,912

ஈரோடு:14,719

புதுக்கோட்டை:11,632

நாமக்கல்:11,773

திண்டுக்கல்:11,407

திருவாரூர்:11,321

கள்ளக்குறிச்சி:10,905

தென்காசி:8,507

நாகப்பட்டினம்:8,568

நீலகிரி:8,326

கிருஷ்ணகிரி:8,135

திருப்பத்தூர்:7,626

சிவகங்கை:6,756

ராமநாதபுரம்:6,455

தர்மபுரி:6,644

கரூர்:5,487

அரியலூர்:4,725

பெரம்பலூர்:2,281

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 946

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,043

ரயில் மூலம் வந்தவர்கள்: 428

இதையும் படிங்க: கரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பில்லை! - அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details