தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களே உஷார்! தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா - அதிகரிக்கும் கரோனா

சென்னை: தலைநகர் சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்றால் ஒரேநாளில் 225 பேர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று
கரோனா தொற்று

By

Published : Mar 5, 2021, 9:49 PM IST

சென்னையில் தொடர்ந்து குறைந்துவந்த கரோனா தொற்று நேற்று (மார்ச் 4) புதிதாக 189 எனப் பதிவாகி இருந்தது. இன்று 225 எனப் பதிவாகி இருக்கிறது. மேலும், புதிதாக 40 நபர்களுக்கு வைரஸ் (தீநுண்மி) தொற்று வேகமாகப் பரவியுள்ளது சென்னை வாழ் மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும், புதிதாக 54 ஆயிரத்து 676 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 538 நபர்களுக்கும், இங்கிலாந்திலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கும், கர்நாடகா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என 543 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கரோனா
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 74 லட்சத்து 19 ஆயிரத்து 485 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் எட்டு லட்சத்து 53 ஆயிரத்து 992 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது 3,954 நபர்கள் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 562 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 525 என உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் கரோனா தொற்று
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துமனையில் இரண்டு நோயாளிகளும், அரசு மருத்துமனையில் மூன்று நோயாளிகள் என மேலும் ஐந்து பேர் இறந்துள்ளனர். இதுவரை 12 ஆயிரத்து 513 பேர் இறந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2,36,485
கோயம்புத்தூர் - 5,5982
செங்கல்பட்டு - 5,3009
திருவள்ளூர் - 4,4325
சேலம் - 3,2788
காஞ்சிபுரம் - 29,608
கடலூர் - 25,211
மதுரை - 21,284
வேலூர் - 2,1038
திருவண்ணாமலை - 1,9513
திருப்பூர் - 1,8439
தஞ்சாவூர் - 1,8192
தேனி - 1,7173
கன்னியாகுமரி - 1,7120
விருதுநகர் - 1,6682
தூத்துக்குடி - 1,6365
ராணிப்பேட்டை - 1,6250
திருநெல்வேலி - 1,5759
விழுப்புரம் - 1,5278
திருச்சி - 1,5026
ஈரோடு - 14,847
புதுக்கோட்டை - 1,1674
நாமக்கல் - 1,1826
திண்டுக்கல் - 1,1520
திருவாரூர் - 1,1382
கள்ளக்குறிச்சி - 1,0908
தென்காசி - 8,567
நாகப்பட்டினம் - 8,627
நீலகிரி - 8,377
கிருஷ்ணகிரி - 8,180
திருப்பத்தூர் - 7,642
சிவகங்கை - 6,802
ராமநாதபுரம் - 6,474
தருமபுரி - 6,661
கரூர் - 5,513
அரியலூர் - 4,746
பெரம்பலூர் - 2,285
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 954
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1044
ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details