Madras Institute of Technology: சென்னை குரோம்பேட்டையில் எம்ஐடி கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் இருந்ததால் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக 1,417 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக வந்துள்ள முடிவுகளில் 46 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில மாணவர்களுக்கு இன்னும் முடிவு அறிவிக்கபடாததால் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.