சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 412 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,193 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 43 லட்சத்து 98 ஆயிரத்து 110 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 25 லட்சத்து 16 ஆயிரத்து 11 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 32 ஆயிரத்து 767 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.