கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டுவந்தது. இதையடுத்து பாதுகாப்பு பணியிலிருக்கும் காவலர்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது.
சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி - corona in tamilnadu
சென்னை: ஐஸ்ஹவுஸ் காவலர் குடியிருப்பில் வசித்துவந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஐஸ்ஹவுஸ் காவலர் குடியிருப்பில் வசித்துவந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் D4 ஜாம்பஜார் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். சில நாள்களாக அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மே 15ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டார். அந்தப் பரிசோதனையில் இன்று அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவர், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஜெய்ப்பூரில் ஒரே நாளில் 119 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு